இங்கு உள்ள கவிதைகள் அனைத்தும் பிற  இணையதளங்களில் இருந்து பெற்றவை 

பூக்களின் மௌனம் வண்டுக்கு தெரிவதில்லைசில பாக்களின் மௌனம் படிக்காமல் புரிவதில்லை நிலவின் மௌனம் இரவுக்கு தெரிவதில்லை காற்றின் மௌனம் கண்களுக்கு தெரிவதில்லை ஊமைகளின் மௌனம் இந்த உலகத்துக்கு புரிவதில்லைநண்பா ..........உன் காதலும் அப்பிடித்தான் உன் காதலிக்கு புரியவில்லை ....வலிகள் தனி வழி செல்லட்டும் உன் விழி நீரின் வழி மாற்ற என்றும் உன்னோடு நட்புடன் நான் ........

பெண்ணே!என் காதலை உன்னிடம்எப்படிச் சொல்வது?காதலுடன் பேசக்காட்டாற்று வெள்ளமாய்க்கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்கண்களைக் கண்டதும் கானலாகின.சொல்ல நினைத்துத் துடித்தவைசொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.கண்டவுடன்கதவுக்குப் பின் மறையும் உன்னைக்காண மனது துடித்தாலும்பண்பாடு தடுக்கிறது;என் பாடு சொல்ல வழியில்லையே?சொல் பெண்ணே!என் காதலை உன்னிடம்எப்படிச் சொலவது?
உன் கைகளின் ரேகை போன்றது நான் உன்னில் கொண்ட அன்பு, 
நீ என்னை கொன்றாலும் மாறாது
அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது..என் இதயம் கேட்பது சொல்லட்டுமா?ஒரு தாய்ப்பறவை தன்குஞ்சுகளுக்களிக்கும் கதகதப்பு.மழலை பசியுணர்ந்துமார்பு கொடுக்கும் தாய்மை.குலுங்கி நான் அழும்போதுகுனிந்து என் முதுகு தடவிஆறுதல் சொல்லும் தோழமை.தோல்வி கண்டு நான் துவளுகையில்இறைவன் துணை சொல்லிஇதயம் தேற்றும் இதம்.ஒவ்வொரு ஸ்பரிசத்திலும்உனக்கு நான் இருக்கிறேன் என உணர்த்தும் உறுதி.கைவிரல் பின்னிக் கொண்டுகாலம் முழுமைக்கும்காதலி நான் உண்டு என்றுகண்டுகொள்ள வைக்கும் சிநேகம்.கூடல் வயது குன்றிய பின்னரும்காதல் என்பது கரையாத ஒன்று எனஅன்பு காட்டும் அண்மை.கோபப்பட்டு நான் கடின வார்த்தை பேசியபோதிலும்அமைதி காட்டிப் பின் பெரிதுபடுத்தாத பெண்மை.ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன்ஆதிக்கம் கலந்த அன்பு.எங்கேனும் நான் எல்லை மீறினால்கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்உன்னிரு கண் ஈரம்.இத்தனை கேட்டாலும்என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான்.கிடைப்பாயா?உயிரோடு புதைப்பது பெருங்குற்றம்.தண்டனை மட்டும் கிடையாது.எந்த நாட்டுப் பெண்களுக்கும்
free counters